கோதார்த்தின் முதல்படம் பிரீத்லெஸ்(Breathless)/யமுனா ராஜேந்திரன்

நியூ வேவ், பிலிம் நோயர் என இருவிதமான கதைகூரலின் வடிவம் அதன் சொல்முறை. பிரான்சின் நியூவேவ் இத்தாலியின் நியோ ரியாலிஸ்ட் சிந்தனைப் பள்ளியின் தாக்கத்தில் உருவானது. பிலிம் நோயர் அமெரிக்கச் சிந்தனைப் பள்ளி.பிரீத்லஸ் படத்தின் நாயகன் பிரான்ஸ் குடிமகன், குட்டித்திருட்டுகள் செய்பவன். நாயகி பிரான்சுக்குப் படிக்கவந்த கீழ்மத்தியதரவர்க்க அமெரிக்க மாணவி. இருவருக்குமிடையில் இருந்தும் இல்லாமலும் இருக்கும் காதல். பின்னாட்களில் அரசியல் ரீதியில் முதிர்ச்சிபெற்ற கோதார்த் இப்படத்தை நிராகரிக்கிறார். உலக சினிமா விமர்சகர்களுக்கு ஜம்ப்கட்(Jumpcut), டிரேக்கிங்(Tracking) போன்ற இன்னவேடிவ் டெக்னிக்குகளுக்காக இப்படம் ஒரு வோர்ல்ட் கிளாசிக் சினிமா. 1967 இல் தயாரிக்கப்பட்ட இப்படம் பற்றி தொண்ணூறுகளில் கோதார்த்திடம் கேட்க, அது ‘ஆலிஸ் இன் வொன்டர் லேன்ட், ஸ்கேர்பேஸ் (Scarface) படங்கள் மாதிரி’ என்கிறார். ‘ஆலிஸ் இன் வொன்டர் லேன்ட்’ படித்தும், பார்த்திருந்தும் இந்த ஒப்பீடு எனக்குப் புரியவில்லை. இந்த ஒரு வாக்கியத்தின் பொருட்டு பிரையன் டீ பாமா இயக்கிய, ஆலிவர் ஸ்டோன் கதை எழுதிய ஸ்கேர்பேஸ் படத்தை தேடிப் பார்த்தேன்.ஆலிஸ்தான் பிரீத்லெஸ் படத்தின் நாயகி. பிரீத்லெஸ் பட நாயகன்தான் ஸ்கேர்பேஸ் நாயகன். 1967 இல் கோதார்த் தனது படுக்கையறையில் கொண்டிருந்த ஒரே போஸ்ட்டர் ஹாலிவுட் ஸ்டைல் நாயகன் ஹம்ப்ரி போகார்ட்டினுடையது. அவரது ஸ்டைல் எப்போதும் உதட்டில் புகையும் சிகரெட், பாதிமுகம் மறைத்தபடி தலையில் சாய்ந்த தொப்பி. இதுதான் பிரீத்லெஸ் நாயகனின் அடையாளமும். படத்தைப் புரிந்துகொள்ள அடிப்படையான இந்த விவரங்களை மட்டும் தெரிந்து கொள்ள 10 மணி நேரங்களுக்கு மேலாக வாசிக்க வேண்டியிருந்தது. படங்கள் பார்த்த நேரம் தனி. கோதார்த் குறித்த, அவரது முழுப்படைப்புலகமும் குறித்த உரையாடல் நூல் இந்த ஆண்டு வர உள்ளது. தமிழ் ஸ்டுடியோ இயக்கத்தின் படிமை மாணவரும், இன்றைய சினிமாக் கல்வியாளருமான அம்சவள்ளி என்னுடன் உரையாடுகிறார். பேசாமொழி திரையிதழ் பொறுப்பாசிரியர் தினேஷ் உரையாடலை நெறிப்படுத்தித் தொகுத்து நூலாகப் பதிப்பிக்கிறார்..

38இரா.விஜயன், Harisankar and 36 others2 Comments1 ShareLikeCommentShare