பக்குவம்/தி.சோ .வேணுகோபாலன்

அடுத்த வீட்டில்
அழுகுரல் கேட்டது;
சர்க்கரை வந்தது.
………….

இன்று முதன் முதல்
மணவறை புகுந்தவள்
இடுப்பைப் பிசைந்தாள் !
காலண்டர் கிழித்துக்
காலம் கரையுமா?
சுமை, வலி, இல்லாமல்
சுக்கு மருந்துக்கு
ஆசைப்பட்டால் ?
…………..

உருப்படியா
வெறுங் கணக்கா
எனக்கூடப் பாராமல்
முக்கிப் பலனில்லை !
முளைத்ததெலாம் உயர்வில்லை !

One Comment on “பக்குவம்/தி.சோ .வேணுகோபாலன்”

Comments are closed.