ஸ்ரீஅரவிந்தர் அருளிய பொன்மொழிகள்!
தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்
……………………………….
*ஆண்டவன் கண்ணுக்கு அற்பமானதென்று எதுவும் இல்லை. அவன் அனைத்தையும் ஒன்றுபோலவே நேசிப்பான். அவனைப் போலவே நீயும் இரு. எல்லாவற்றையும் ஒன்று போல நேசி. யாரையும் எதையும் வெறுக்காதே.
*துன்பத்துக்காக வருந்த வேண்டாம். அதைத் தொடர்ந்து நன்மை நிச்சயம் வந்துசேரும். நன்மையை எதிர்பார்த்துக் காத்திரு. அமைதியாக இரு.
*மூளையைக் கொண்டு இறைவனைப் புரிந்துகொள்ள முடியாது. அவர் இதயத்தோடு மட்டுமே பேசுவார். நீங்கள் மூளையால் இறைவனைத் தேடாதீர்கள். இதயத்தால் இறைவனை நேசியுங்கள்.
*மகிழ்ச்சி என்பது ஒரு மனநிலை. அந்த மனநிலையைக் கற்றுக் கொண்டால் துன்பத்திலும் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். அதுவே இறைநிலை.
*ஓர் எறும்பின் உயிரைக் காப்பாற்றுவதென்பது பேரரசை நிறுவுவதை விடவும் சிறந்த செயல்.
*பொறாமை என்பது குறுகிய மனப்பான்மை உள்ளவர்களுக்கும் மன தைரியம் இல்லாதவர்களுக்கும் வரும் உணர்வு. பொறாமையைத் தவிர்த்துவிடு.
*மன அழுத்தத்துக்கு ஒருபோதும் முக்கியத்துவம் தராதே. மன அழுத்தம் தரக்கூடிய எந்த ஒரு விஷயமும் உனக்கு நடக்கவில்லை என்று நினைப்பதுதான் அதிலிருந்து வெளியே வருவதற்கான ஒரே வழி.
*அடுத்தவர்களைக் குறை கூறுவது, மதிப்பீடு செய்வது, உங்களோடு ஒப்பிட்டுக் கொள்வது இவற்றின் மூலம் உங்களை நீங்களே காயப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
*கவலைப் படாதே. எது உனக்கு உண்மையாகத் தேவைப்படுகிறதோ, அது உன்னைத் தேடி வரும். காலம் வரும்வரை காத்திரு.
*நமது திறமையின்மை பெரிய விஷயமல்ல. எல்லா மனிதரும் அவர்களுடைய இயற்கை வழியில் திறமையில்லாதவர்களே. ஆனால் தெய்வ சக்தியும் உள்ளது. அதை நம்பு. அதில் நீ நம்பிக்கை வைத்தால் திறமையின்மை திறமையாக மாற்றப்பட்டு விடும். கஷ்டமும் போராட்டமுமே வெற்றியடைவதற்கான சாதனமாகி விடும்.
*மனச்சோர்வு கொள்ளாதே. அது தவறான சக்திகளின் தாக்குதல்களுக்குக் கதவைத் திறந்துவிடும். என்னால் முடிந்ததை நான் செய்வேன், உரிய காலத்தில் எல்லாம் நடக்கும்படி இறைவன் பார்த்துக் கொள்வான் என நம்பு. அதுவே உண்மை.
*தோல்விகளும் தடுமாற்றங்களும் இருந்தால் அவற்றை அமைதியுடன் நோக்கி அவற்றை நீக்குமாறு விடாப்பிடியாக இறைவனது உதவியை நாடு. மனம் கலங்கவோ வேதனைப் படவோ அதைரியப்படவோ கூடாது.
*நீயாகவே செய்ய முடியாததை இறைவனின் சக்தியை உதவிக்கு அழைப்பதன் மூலம் செய்து முடிக்கலாம். இறைவனின் சக்தியை உதவியாகப் பெற்று அதை உன்னுள் வேலை செய்ய விடுவதே சாதனையில் வெற்றிபெற உண்மையான வழி என்பதை உணர்ந்துகொள். இறைவனின் சக்தியை மனப்பூர்வமாக அழை.
*அன்னையின் சக்தி எப்பொழுதும் உனக்கு மேலே இருந்து கொண்டே இருக்கிறது. அதை ஆதாரத்தினுள் வரும்படி அழைக்க வேண்டும். சக்தி அங்கே வந்ததும் உணர்வோடு உன்னை அதற்குத் திறந்துவைத்து உனது முழுச் சம்மதத்துடன் அதைத் தொடர்ந்து வேலைசெய்ய விட வேண்டும்.
உன்னுடைய தொடர்ந்த சம்மதத்தின் ஆதரவுடனும் அந்த சக்திக்கு எதிரான எல்லாவற்றையும் விலக்குவதன் மூலமும் அதைத் தொடர்ந்து வேலை செய்ய விடு.
இறுதியில் உள்ஜீவன் முழுவதும் அமைதியடைந்து அன்னையின் சக்தி, சாந்தி, உவகை, சாந்நித்தியம் இவற்றால் ஜீவன் நிரம்பும். அதன்மேல் புற ஜீவனும் உள்ஜீவனைப் பின்பற்றிச் செல்லும்.
*பகைச் சக்திகளின் செயல் காரணமாகத் துன்பப்படுவதைத் தவிர்க்க மிகச் சிறந்த சாதனம் என்ன தெரியுமா? இறையருள் மீது முழுமையாக நம்பிக்கை வைத்து முழுச் சரணாகதி செய்தலே.
*நாம் விரும்பினால் சோகம் மகிழ்ச்சியாக மாறும். ஆனால் சோகம் மகிழ்ச்சியாக மாறவேண்டும் என்று நாம் உள்மனத்தில் விரும்ப வேண்டும். மகிழ்ச்சி என்பது சோகத்திற்கு மாற்றான ஒரு மனநிலை. அவ்வளவே.
(அமுதசுரபி பிப்ரவரி 2022 இதழில் இடம்பெற்றுள்ள படைப்பு)