
—
ஜானகிராமனிடம் வாழ்வின் எல்லாக் கேள்விகளுக்கும் பதில்கள்
உள்ளனவா என என்னிடம் கேட்கப்படுகின்றன. தி.ஜானகிராமனின் எழுத்துக்கு நான் “அதாரிட்டி” அல்லேன் என்ற ஒற்றைச் சொல்லில் பதிலளித்துவிடமுடியும். அது சரியன்று.அவர் எழுதினார், நான் வாசிக்கிறேன் அவ்வளவே என்று தள்ளிநிற்கவும் ஏலாது.தி.ஜாவின் எழுத்துக்கலை அதன் உள்ளுறைதாண்டியும் ஏதோ நீளமாகச் சொல்லவருகிறது. எல்லாக் கேள்விகளுக்கும் அவருடைய கதாபாத்திரங்களே நேர்த்தியான
பதிலைத் தந்துவிடுகின்றன.பிறகென்ன!தெளிவுரை விரிவுரை பொழிப்புரைகள்
ஏன் ?
“வனப்பு வடிவே எதிரே நிற்பது போலிருந்தது.வெண்தாழைமுகம்,பாதம்,கை,முதுகில் தளர்ந்துபுரளும் சிற்றலையோடு கூந்தல்,அரக்கு வண்ணப்புடவை,வலது தட்டில் பூஜைத்தட்டு,இடதுகையில் முந்தானை வாளிப்பும் வர்ணமும் ஒன்றிவடிந்த அழகு, பளீரென்று தடுத்துநிறுத்தும் தோற்றம். கோயில் திண்ணையில் இருந்த பெரிய பிள்ளையாருக்கு நெற்றியில்குட்டிக்கொள்கிறாள். குருக்கள் விபூதி
யைக் கொடுத்ததும் நெற்றியில் குங்குமத்தின் கீழ் வைத்துக் கொள்கிறாள்.குருக்களின் அழுக்கு வேஷ்டித் தலைப்பில்பழைய தினசரித் துண்டில் கிடந்த அந்தச்சாம்பலுக்கு இப்போது எவ்வளவு பெரியஸ்தானம் கிடைத்துவிட்டது.”
உரையாடலின் பலமன்று,உரையாடலே கதைதான்.தஞ்சாவூர் வாழ்க்கை- யாரும்பிடுங்கிக் கொள்ளமுடியாது என்பது அவரது எண்ணமாக இருக்கலாம்.ஆனால்அனைத்துப் பிரதேசங்களுக்கும் இவை பொருந்திப்போகின்றன.வெற்றிகரமான எழுத்தின் வேலை இதுதான்.கச்சிதமாக வடிவம் கொள்வதுதான்.நல்ல எழுத்தின்
பயணமும் பிரவேசமும் ஆங்காங்கும், அறியப்படாத மண்ணிலும் இடங்கொள்
ளும்.”சரிதான் போய்யா,என்னமோஅந்தப்பொண்ணு கொஞ்சம் சேப்பாயிருக்கு.நீ அதுக்காக மயங்கறே.உன் மவனுக்குத் தகுந்தபொண்ணா அது சேப்பா இருந்தா ஆயிடுச்சா..” இந்த எள்ளல் ரசமானது.”சேப்பாயிருந்தா போதுமா.களை குறி வேண்டாமா.பூ வென்று ஊதினா ஒடிஞ்சு விழுந்துடும்.கூனல்,குச்சிக்காலு.உள்ளங்காலுசப்பை.தண்ணிய மிதிச்சுட்டு நடந்து வரும்போது காலடியப்பாத்திருக்கியா-உள்ளங்காலு முழுக்க சொத்னு பதிஞ்சிருக்கும்மனிதமன ஆழத்தில் இவை இருக்கவேசெய்கின்றன.இவை அறம்-அறமற்றவைஎன்ற அவதானிப்பு அதற்கு இல்லை.நம்
தி.ஜா இதைக்கண்டறிகிறார்.எல்லாமனிதர்களுக்குள்ளும் இருக்கும் மேன்மையற்றவைகளாகப் புனையப்பட்டவைகள்ஜானகிராமனின் வழி வரும்போது சரியாக வருகின்றன.எழுத்தின்மாயம் இது.தி.ஜா விடம் கெட்டபாத்திரங்கள் என ஏதுமில்லை.ஏதோ ஒவ்வொருவரும் சந்தர்ப்பத்தால் சந்தித்துக்கொண்டோம் என்பது மாதிரியின்றி ஒட்டிப்பிறந்தவர்களாகத்தான் ஜானகிராமம் சொல்கிறது.நாம் நம்பியிருப்பதிலிருந்து தப்பிச்செல்ல முடியாது.மனிதனின் சுயம் முக்கியமானது என்பதுதான் ஜானகிராமன் கட்சி.”தவம்”சிறுகதையின் ஆதாரசுருதி இதுதான்.வாழ்வில் சில கடன் பெற்றதாக இருக்கக்கூடும்.அதன் வண்ணங்கள் சிதையாமல்
பாதுகாத்தால் நாம் அதற்குள் இருப்போம் அவை நமக்காகிவிடுகின்றன.திருப்பித்தரவேண்டிய அறம் விலகிச் செல்கிறது. இது எழுத்தாற்றலின் உச்சம்.
“தஞ்சாவூருக்கு ஒரு டிக்கெட் எடுத்துகிட்டு அவளைப்பார்ப்பதற்காக ரயிலை விட்டு இறங்கியதும் ஒத்தமாடுவண்டி பிடிச்சு செல்லூர்ச் சொர்ணாம்பா வீடுன்னா கொண்டுவிட்டுடுவான்.ஆனா வெறுங்கையோடு போ..இல்லாட்டி இந்தச் சீமையில் சம்பாரிச்சதெல்லாம் அவகால்லே கொட்டிப்புடுவீங்க..இல்லேன்னாலும் திரும்பப் போயி கொண்டுவந்து கொட்டத்தான் போறீக. மனிதர்களின் வாழ்க்கை என்பதைவிட
அபிலாஷைகள் என்பதே சரியாக இருக்கும்.இது நேரிய வாழ்க்கையா என்ற
கேள்விகளுக்கும் தத்துவ விசாரங்களுக்கும் இடமில்லை.நடுத்தர மக்களின்
கனவுகள் இவைதாம்.தி.ஜா கைப்பற்றிக்கொண்டது இவைகளைத்தான்.மனம்
புழுதியானது.அதன் தூசு மேற்பரப்பில்தான்.இது முறையிடத்தகுந்ததல்ல.நம்
இதிகாச புராண மேன்மைகளில் இருந்துபடிந்திருக்கும் புழுதிகளைக் கண்டு
அதனோடு யுத்தம் புரிந்து தூய்மைப்படுத்தும் வேலை போலல்ல. இயல்பானது.
ஓர் ஊதலில் காணாமல்போவதுதான்.வாழ்நாள் தர்மயுத்தம் என்பது அபத்தமானதுதான்.
“மூட்டை தூக்க எவ்வளவு தெம்பு வேணுமோ அவ்வளவுதான சாப்பிடுவதே…
