
பாஸ்வேர்டுகளோடு வாழ்ந்துவாழ்ந்து…
கண்டிஷன் அப்ளைகளோடு
சென்றுசென்று…
ஓயாத ஒப்பந்தங்களோடு
ஒட்டிஒட்டி…
பார்க்கின்ற இடமெல்லாம்
யூசர் நேம்கள்…
செல்கின்ற இடமெல்லாம்
சில ஸ்டார்கள்…
பேசுகின்ற இடமெல்லாம்
கணக்குவழக்குகள்..
வாழ்க்கை கணினிப்பொழுதா?
இல்லை கலியுகக்பொழுதா?
வாழ்க்கை அற்புதமானதா?
இல்லை அற்பமானதா?
வாழ்க்கை கூட்டிப்பெருக்கலா?
இல்லை கழித்து வகுத்தலா?
கொஞ்சம் புரியாமல் நிற்கிறேன்…
குழம்பித்தவிக்கிறேன்…
ஒரு யூசர் நேமுடன்
பல பாஸ்வேர்டுகளோடு…
சில கண்டிஷன் அப்ளைக்களையும்
ஒப்பந்தங்களையும் பார்த்தபடி!

நன்றாக இருக்கிறது!