
எங்கள் வீட்டு
சமையற்கார அம்மா
எப்போதும் போடுவது
எங்கம்மாவினால் நிராகரிக்கப் பட்ட
செருப்பு
ஐ.டி.ஐ.யில்
படித்து
பணியில் சேர்ந்த
மகன்
முதல் ஊதியத்தில்
வாங்கித் தந்த
புதுச் செருப்பை
வாசலில் கழற்றி
கால் கழுவி
பூரிப்புடன்
அவள்
சமையலறைக்குள்
நுழைந்தும்
முணுமுணுப்பு ஒன்று
கேட்டது
‘அல்பத்துக்கு அதிர்ஷ்டம்
அடிச்சா
அர்த்த ராத்திரிலெ
கொடெ பிடிக்குமாம்’
6/2/22 காலை 10 மணி
