
குடை குடை
என்று
குடைவார்
கணக்கு வாத்யார்.
பிதாகரஸை
கண்டு பிடித்ததே
அவர் பிதாதான்
என்கிற மாதிரி
அலம்பல்
நிசமாகவே
குடை பிடிக்க வேண்டும்
அவர் பேசும்போது
முன்னால்
நின்றால்
ஆனாலும்
கடவுள் கணக்கு
இருந்தது
வேறாக
இன்டக்ரேஷன் பரீட்சையில்
வெளிப்பட்டது
அக்மார்க்
ஐக்யூ
டென்மார்க் கிடைத்தது
டென்த் இறுதியில்
கால்குலஸால்
காலணாவுக்கு லாபமில்லை
கால்நூற்றாண்டு
கழிந்து விட்டது
புரிவதற்கு
இப்போதும்
யாராவது
குடைந்து
கொண்டு தான்
இருக்கிறார்கள்
மனைவி
நீங்கலாகவும்.

Why disclaimer in the last line