அன்புள்ள நண்பர்களே, /எஸ்.சண்முகம்

தமிழின் மூத்த கோட்பாட்டுத் திறனாய்வாளரும் பெருமதிபிற்கும் உரிய பேராசிரியர் திரு. பஞ்சாங்கம் அவர்களின் பெயரில் வழங்கப்படும் பஞ்சுபரிசில்2021 விருதுக்குஎனது மொழியின் மறுபுனைவு”எனும் நூல்

யாவரும் பதிப்பகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

 பேராசிரியர் திரு. பஞ்சாங்கம் அவர்களின்.பிறந்த நாளான (04.02. 2022) அன்று அறிவிக்கப்பட்டுள்ளதில் , மட்டற்ற மகிழ்வாகவான தருணமாக, பேறாகவும் உணர்கிறேன். இந்நேரத்தில் பஞ்சுபரிசில் விருது தேர்வு குழுவினருக்கு, என் உளமார்ந்த நன்றியும்,  சிரம்தாழ்ந்த வணக்கங்களயும் உரித்தாக்குகிறேன்.

***************

நண்பர்களே,

விருது பெற்றமைக்கு என்னை கைபேசி தொடர்பு கொண்டு பேச தொடர்பு கொண்டு போது. என்னால் அழைப்பை ஏற்க இயலாமல் போனதறகான காரணத்தையும் சொல்ல விரும்புகிற்றேன்.

கடந்த 01/04/2021 அன்று எனக்கு Piles மூலநோய்க்கான அறுவை சகிச்சை பிரபல கார்ப்ரேட் மருத்துவமனையில் நடந்தது. அடுத்த நாள் டிஸ்சார்ஜ செய்தார்கள். ஆனால். அடுத்த நாள் கடுமையான காய்ச்சல் இருந்த்தால், மருத்துமனையை அழைத்து சிகிச்சை அளித்த மருத்துவரிடம் பேச முயன்ற போது நெடுநேரம் முயன்றும் கிடைக்கவில்லை. பின்னர்,உங்கள் எண் தாருங்கள் என்று கேட்டனர். அடுத்த ஐந்து மணிநேரம் கழித்து ஒரு ஜூனியர் கூப்பிட்டு விசாரித்துவிட்டு ஒருவேளை ஜூரம் கோவிட் ஆகவும் இருக்கலாம் என்றார், நான் இரண்டு நாட்களுக்கு முன்புதான் அங்கு கோவிட் பரிசோதித்து நெகடிவ் என்று சகிச்சை அளித்தீர்கள் என்றபோது. அப்படியெனில் வீட்டுப் பக்க்த்தில் உள்ள பொது மருத்துவரை அணுகுங்குள் என்று கூறினார். இதில் கொடுமை என் படுக்கைக்கு அடுத்த படுக்கையில் டெங்கு நோயாளியை அனுமதித்திருந்தனர்.

நேற்று குருதிப் போக்கு அதிகரித்தலில் மறுபடியும் அதே மருத்துவமனையை அணுகிய்போது, தங்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை கூப்பிட்டு பேச சொல்கிறோம் என்று இணைப்பைத் துண்டித்தனர். மாலைக்குள் மூன்று லுங்கிகள் குருதியில் முழுமையாக தோய்ந்துவிட்டன செய்வதறியாமல். கடைசியாக செங்குன்றத்தில் உள்ள என் மைத்துனரின் இல்லத்திற்கு அருகில் உள்ள ஒரு அரசு பொதுமருத்துவமனையில் பணிபுரியும் அறுவை சகிச்சை பேராசிரியரை மாலை 7 மணிக்கும் சந்தித்ததும் முழுவதும் பரிசோத்தித்துவிட்டு முதலில் அழுத்த கட்டு போட்டு குருதி கசிவிற்கான மருந்துகளை அளித்தார். ஒன்றரை மணிநேரத்திற்கு பின்னர். பரிசோதித்துவிட்டு தையல் போட்டு சரிசெய்த்தார். ஒரு நாள் மட்டும் எளிய மருத்துவமனையில் observation இல் இருந்தால் போதும் என்று Rs 1500 தான். ஆனால் கார்பரேட் மருத்துவனை எனக்கு போட்ட பில் தொகை Rs. 89.000/ அதில் Rs.77,000 போக Rs 10,000 நான் செலுத்திய தொகை. காப்பீடு இருந்தால் உயர்தர சிகிச்சை கிடைக்கும் என்பதின் அறிவீனத்தை இன்றுதான் உண்ர்ந்தேன்.

கார்ப்ரேட் மருத்துவனையில் என் உடல் குறைகளை ஒரு மருத்துவரும் முழுமையாக காதுகொடுத்துக் கேட்கவில்லை. அறுவை சிகிச்சை முன்னிரவு ஒரு ஜூனியர் மருத்துவர் வந்து அடிவயிற்றில் மிகச்சிறிய கோளாறு இருக்கிறது. அதையும் சேர்த்தே செய்யட்டுமா காப்பீட்டில் சேர்த்துவிடலாம் என்றார். ஒருவேளை அப்ரூவ் ஆகவில்லை  எனில் யார் பணம் செலுத்துவது என்றதும், தலையை சொறிந்தபடி விடைபெற்றார். அடுத்த நாள் காலை அறுவைச் சிகிச்சை நிபுணர் மீண்டும் இன்னொரு முறை அதையே மூன்றுமுறை வலியுறுத்தினார். நான் அதையே சொன்னேன். காப்பீடு தொகையை மறுத்தால் என்னால் பணம் செலுத்த இயலாது என்றதும் சென்றுவிட்டார்.

“எப்படியெல்லாம் யோசிக்கறாங்க பாருங்க.”

******

நண்பர்கள் அழைப்பிற்கு பதிலளிக்காததற்கு

மீண்டுமொரு முறை  மன்னிக்கவும்.

கிழ்கண்ட எண்களில் என்னை இப்போது அழைத்து பேசலாம்