
அம்மாவின் கண் மறையும்
வரைதான் குடை..
தொப்பலாய் நனைந்து
துணிகளின் நிறம்
மாறும் வரை
ஆட்டம் போட்ட
காலம்..
கொஞ்சம் வளர்ந்த பின்
சின்னக் குடையில்
ஒன்றாய் கடற்கரையில்
போன நாட்கள்
காதல் கரைய காரணமா
வேண்டும்..
பணம் பதவி படிப்பு ..
ஏதோ ஒன்று..
பின்னொரு நாள்
காசி யாத்திரைக்குடையில்
யாரோ ஒருவனை
நாணத்துடன் வழிமறிக்கும்
அவளின் முகம்
துரத்த..
பாலைவன ஓரத்தில்
தனியாய்
நானும்..
மடித்து வைத்த குடையாய்
மனம் முழுவதும்
ஏதோ நினைவுகள்..
