குடை/மதுவந்தி

                  விதவிதமாய்க் கொளுத்தும் வெயில்தான் 
                  வருடம் பூரா என்றிருக்கும் 
                  எங்கள் நிறையக் குடிசைகளில் 
                   குடையில்லை. 
                   வாங்குவது கடினம் என்பது தவிர 
                   எப்போதேனும் வருகிற மழையைக் 
                   கொண்டாடும் ஆசையும் கூடக் 
                   காரணமாயிருக்கலாம். 
                   பெரியதாய்ப் பெய்கிற மழையின் போது
                   தவிர்க்கவியலாதபடி
                   சாக்குப் பையும், நெகிழிப் பையும் 
                   குடையாகும். 
                               .  06.02.2022.

3 Comments on “குடை/மதுவந்தி”

Comments are closed.