குடை,/புஷ்பா விஸ்வநாதன்

மழை வரப்போகுது
குடைஎடுத்துப்போ என
அம்மா நீட்டினாள்
கறுப்புக்குடையை
“இரண்டு நாளில்
ஒண்ணாம் தேதி
சம்பளம் வாங்கணும்
நனையாமல் போ”
சேலைத்தலைப்பை
இழுத்துப் பிடித்து
குடையைக்கையில்
வாங்கிக் கொண்டு
பஸ் ஸ்டாண்ட்டுக்கு
நடந்து போகையில்
தூறல் வலுக்கவே
குடையைப்பிரித்தேன்
தலையில் மழைநீர்
சொட்டச்சொட்டவே
அண்ணாந்து பார்த்தேன்
குடையில் பொத்தல்கள்
அம்மா சேலைத்
தலைப்பைப் போலவே.

5 Comments on “குடை,/புஷ்பா விஸ்வநாதன்”

  1. அழகிதழகிது!
    குடைக்குள்ளும் சொட்டச்சொட்ட நனைவோர் இன்றுமுளர் என்பதொரு சோகம்ங்க.

Comments are closed.