பரீட்சை/கணேஷ்ராம்

பள்ளிக்கும்
கல்லூரிக்கும்
பெரிதாய்
பேதமில்லை

படிப்பைத்
தவிர
வேறெதற்கும்
பாக்கியமில்லை

பரீட்சை
நாட்களில்
மனம் பந்தாடும்
பல்லவன்
மெனக்கெட்டு
செய்வான்
தாமதம்

கைகளில் உணவும்
பைகளில் பணமும்
மனநிறைவோடு
பயணியர் நெரிவர்

படிகளில் தொங்கும்
ஒருவரின் கையிலும்
பாடபுத்தகங்கள்
பார்த்தது இல்லை

வேலையின் நாளுக்கு
ஏங்கிடும் மனது
பரீட்சையின்
தொல்லை
இனிமேலும்
இல்லை

முப்பத்து ஆறு
வருடங்கள்
போயின
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு பரீட்சை

எல்லாம் இருந்தும்
இல்லாதிருக்கும்
நிம்மதி வாழ்வில்
நிர்க்கதியாகும்

பால்யத்தின் உவகை
மனதில் ஒலிக்கும்
பலப்பல நினைவுகள்
அலையாய் மோதும்

பந்தயம் தோற்றவன்
பளாரென்று அறைந்தான்

அன்று வலித்தது
இன்று மணப்பது

ஓய்வு நாளுக்கு
ஏங்கிடும் மனது

ஓய்வில் மனிதர்
இலக்கியம் படைத்து
இனிய வாழ்வை
இசைத்திடும் பாங்கு

பலமுறை ஏக்கம்
இயற்கையில் தோற்றும்
ஏக்கங்கள் மட்டும்
நீங்கவேயில்லை

பரீட்சைகள் இல்லா
ஓய்வு நாட்கள்
படுக்கை இடுமோ,
பல்லக்கில் ஏற்றுமோ?

2 Comments on “பரீட்சை/கணேஷ்ராம்”

  1. உணர்வு பூர்வமான உண்மை
    பரீட்சை இல்லா ஓய்வு நாட்கள் உவகையுடன் அமைய வாழ்த்துகள் தோழரே

Comments are closed.