ரிப்பேர் /மகேஷ்

குடை ரிப்பேர்
குடை ரிப்பேர்

எனக்கூவிக்கொண்டு
அப்போதெல்லாம் தெருவில்
போவார் அவர்.

டீக்கடையின் பக்கத்தில்
தெருவில்
குடைக்கம்பி போல்
துருத்திய எலும்பும்
கிழிந்த குடைத்துணி
போலச் சட்டையுடன்
அமர்ந்திருந்த
போது ஒருநாள் பார்த்தேன்..

இப்போதெல்லாம்
யாரும் எதையும் ரிப்பேர்
செய்வதில்லை..

பழுதுபட்டால் பொருளையே
தூக்கி எறிந்து புதுப்பொருள்
கொணர்வதுதான்
மலிவு.

மனிதர்களைக்கூட..

இப்போதெல்லாம்
மழையும்
அடிக்கடி வருவதில்லை..

2 Comments on “ரிப்பேர் /மகேஷ்”

Comments are closed.