
எடுத்தியம்பப் படுகின்றன
எல்லோர்க்கும்
புகழ்ச்சியின் இதிகாசம்
வறியோர்க்கு ஈயப்படும்
சோற்றுருண்டையென
புகழ்தலின் பேச்சுரு
முன்னோடிகளின்
கிழிந்த நாட்கள்
நினைவு படுத்திப் போகும்
வாழ்வியலின் சோகத்தை
மேலோட்ட சாமரங்கள்
தென்றலை கொணர்வதில்லை
கட்டற்ற புழுதியோ
மூச்சடக்கி சாய்க்கச் செய்யும்
கற்றோரின் பாடல்களை
புறத்தில் போட்டு விட்டு
வருவோர் போவோரின்
அபசுரங்கள்
சபையேற்றப்படுகின்றன
என் செய்ய?
புகழ்ச்சியின் கோட்டையில்
எல்லோரும் அரசர்கள்
