மௌனம் /சுரேஷ் ராஜகோபால்

வார்த்தைகள் தடுமாறி யாசிக்கின்றன …
விமோசனம் தேடி – ஆழமான
நிலையிலிருந்த அந்த
மௌனத்திடம்.

மௌனமோ மேலும்
திடம் கொண்டு
மௌனத்தையே
கடைப் பிடிக்கிறது.

சலசலப்புக்கு அஞ்சாத நிலையே
சாஸ்வதம் என்றே
தளர்விலா நிலையெடுத்தது பிறகும்
மௌனமோ தன்னிலை மாறவில்லை