உமா பாலு
கள்ளிப் பெட்டியை அம்மா திறக்க,சொல்லனா ஆவலோடு காத்திருப்போம் பிள்ளைகள்
பழைய துணிகள் சுற்றிய பொம்மைகளை வெளியே கொண்டுவந்து ஒவ்வொன்றாக தூசி தட்டி வைத்த நினைவுகள் .
பொம்மைகளை சுற்றிய துணிகள்
யாவும் நினைவுப் பேழைகளே
எட்டாவதுபடிக்கையில் , ஒண்ணாவதில் போட்ட கவுன்கள் வெளிப்படும்
இது என்னுடையது உன்னுடையது என்று அடையாளம் காட்டி எடுத்துப் பார்த்து குதூகலம் கொள்ளும்.
செட்டியார் பக்கத்தில் சப்பை மூக்கு
கூர்க்கா , மீனாட்சி பக்கம் அன்னப்பறவை அணைத்த சகுந்தலை
பால் குடிக்கும் கன்றோடு பசுமாடு
தசாவதாரம் தஞ்சாவூர் தலையாட்டிகள்
கென்னடியும் சர்ச்சிலும் காந்தி நேரு வோடு
பார்க்கில் குமரன் குன்று,தாஜ்மஹால்,
ஆஸ்பத்திரி, தெப்பக்குளம் தென்னை
பனை வெந்தயக்கீரை புற்கள்
ஒரு நாள் கிருஷ்ணன் மறு நாள் ஆண்டாள் , குறத்தி, பாரதமாதா
வீடுகள் நாடக மேடை யாகும்
பாடல்கள் இரண்டே வீடுகள் பலவற்றிலும்
சுண்டல்கள் சங்கமம் சுவை கூட்டும்
படுத்ததும் கனவில் பொம்மைகள் பேசும்
சரஸ்வதி பூஜையன்று புத்தக கொலு
விஜயதசமி வீடே படிக்கும்
பொம்மைகளை படுக்க வைத்து
மறு நாள் கள்ளிப பெட்டியில்
அடுக்கி வைக்கையில் கனத்தப் போகும்
மனம், அடுத்த நாள் முதல் தீபாவளி க் கனவுகள் அரங்கேறும்!

அந்த நாள் ஞாயபகம்
நினைவிலே வந்ததே.
அந்த நாள் ஞாபகம்
நினைவிலே வந்ததே