வாசு தேவன்
தன்னுடைய எட்டு வயதில் தந்தையை இழந்தது சில்வியா ப்ளாத்தின் உளவியலை வெகுவாக பாதித்தது… இது மன அழுத்தமாக கல்லூரியில் படிக்கும்போது மாறி தன்னுடைய 23 வயதில் மரணத்தோடு விளையாட தொடங்கினார்… தூக்கமாத்திரைகளை விழுங்கி மாடிப்படிக்கட்டுக்கு அடியில் மூன்றுநாள் கேட்பாரேன்றி குற்றுயிரும் குலையிறுமாக இருந்தவரை காப்பாற்றினார்கள்….மன அழுத்த அதிகரித்தாலும் மறுபுறத்தில் அவருடைய படைப்பாற்றல் உச்சம் அடைந்தது…. ஒரு பெண்ணின் வேட்கை, மன அழுத்தங்கள், மரணத்தைப் பற்றிய தத்துவார்த்த கேள்வி, மூர்க்கமான உணர்ச்சி, பல நிர்பந்தங்களுக்கு அடியில் சமரசத்துடன் வாழும் பெண்களின் கேவல் என பல உணர்வுகளை தன் கவிதையில் அபாரமான எழுதிச் சென்றார்..மீண்டும் ஒரு முறை தூக்க மாத்திரைகளை விழுங்கி தப்பினார்… டெட் ஹெயுஸை சந்தித்து காதலில் விழுகிறார்…இருவருக்கும் பிடித்தமான ஜேம்ஸ் ஜாய்ஸின் யுலிஸீஸ் நாவல் அரங்கேறும் 16ம் தெதி ஜூன் மாதத்தில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.. மேலும் இருவருக்கும் பிடித்தமான மற்றொரு கவிஞர் W.B. யேட்ஸ் ஒரு காலத்தில் வாழ்ந்த வீட்டில் குடியமர்கிறார்கள்.. இருந்தாலும் ப்ளாத் மரண விளையாட்டை நிறுத்தவில்லை. ஒருமுறை காரை அதிவேகத்தில் ஓட்டிச்சென்று குளத்தில் பாய்ச்சினார்..இம்முறையும் மரணத்திடம் தோற்றார்..இந்த விளையாட்டோடு இரண்டு குழந்தைகளுக்கு தாயானார்…இடையில் மூன்று அல்லது நான்கு முறை கருக்கலைப்பு நடந்தது.. இரண்டிற்கு மட்டும்தான் தன் இறுதி காலத்தில் ப்ளாத் ஏங்கினார். (1) காதல் (2) மரணம். அவருடைய இறுதிக்கால கவிதைகளில் இதை அவதானிக்க முடியும்.. முதலாவது அவருக்கு திருப்தி அளிக்கும் வரையில் கிட்டவில்லை.. டெட் ஹெயுஸுக்கு மற்றொரு பெண்ணோடு தொடர்பு இருந்தது தெரியவந்தபோது இரண்டாவதை தேர்வு செய்தார்.. இறப்பதற்கு சில நாட்களூக்கு முன் அவர் எழுதிய கடைசி கவிதை இதுதான்… முதல் வரியில் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்…அடுத்த சில நாட்களில் பக்கத்து அறையில் குழந்தைகளை தூங்க செய்து மிக நிதானமாக தன் தலையை கேஸ் ஸ்டவ்வில் வைத்து மாய்த்துக் கொண்டு மரணத்தோடு கை குலுக்கினார்…
Edge
The woman is perfected.
Her dead
Body wears the smile of accomplishment,
The illusion of a Greek necessity
Flows in the scrolls of her toga,
Her bare
Feet seem to be saying:
We have come so far, it is over.
Each dead child coiled, a white serpent,
One at each little
Pitcher of milk, now empty.
She has folded
Them back into her body as petals
Of a rose close when the garden
Stiffens and odors bleed
From the sweet, deep throats of the night flower.
The moon has nothing to be sad about,
Staring from her hood of bone.
She is used to this sort of thing.
Her blacks crackle and drag.
