தெருவின் ஒலங்கள் / வைதீஸ்வரன்


வாசல் இருட்டைப் பார்த்துப் பார்த்து
வறண்டு போன கண்களை
இறுக மூடிக் கொண்டு
பொறுமை வற்றிப் போய்
பாயைப் பிய்த்துக் கொண்டிருந்தாள் அவள்
விரல்களின் வெறியைத் தணிக்க…..

எங்கோ
அனாதை நாயாகக் கடைவாசலோரம்
விழுந்து கிடக்கும் அவனருகில்
சாக்கடை ஓடிக் கொண்டிருந்தது
சள சளவென்று

One Comment on “தெருவின் ஒலங்கள் / வைதீஸ்வரன்”

  1. நாட்டு நடப்பு தான் இது. நச் சென்று அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.
    “இந்த நிலை என்று மாறுமோ”?

Comments are closed.