
பெரிய ஆலமரம்
பல்வேறு பறவைகள் தன்
துணையோடு வந்து
கூடு கட்டி
குஞ்சு பொரித்து
வேறு இடம் பெயர்ந்து விடும்
மரத்திடம் அனுமதி பெறாமலே
குடும்பம் நடத்தி, பெயர்தல்
வழக்கம் தானே
இயற்கையில் அவை ஒரு
இணக்கமே, சகித்திடும்
வெய்யலில் வாழ்ந்திடும்
மழையில் நனைந்திடும்
சூரைக் காற்றைச் சகித்திடும்
குஞ்சுக்கு இரைதேடி ஊட்டிடும்
