செல்விபிரகாஷ்🌹
காத்திருப்புக்காவியத்தின் பக்கங்கள் எல்லாம் திருவிழா கனவுதான்.
பெட்டியில் அடைக்கப்பட்ட பொம்மைகளின் ஏகாந்த நினைவுகளில் அவதாரங்கள் இடம்மாற்றிப்படுக்கலாம்,
புதுப்பபுது வேடம் பூண்டு தெய்வங்கள் தேவதைகளை வேடிக்கைப்பார்க்கச்சொல்லலாம்.
நடக்கும்வரை நடக்கட்டும்,எல்லாம் அடுத்தமுறைப்பெட்டியைத்
திறக்கும்வரைதான்.
அதுவரை காத்துக்கிடக்கட்டும் தெய்வங்கள் ஒரு பிடி சுண்டலுக்கும் ஒரு படி சங்கீதத்திற்கும்.
