என்பா 57
வெளியில்
வந்தேன்
மூக்கிலிரு சொட்டுநீர்
விரைந்தேன் படுக்கையறைக்கு
ஏனிங்கு வந்தேன்
மீண்டும் வெளியில்
மீண்டும் படுக்கையறை
கைத்துண்டு கண்ணில் பட்டது.
என்பா 58
பனைமரம் நாட்டின்
நிலத்தடிநீர் தேக்கி
அடிமுதல் நுனிவரை
அத்தனையும் தங்கம்
பனைமரத்தின் அழிவு
பஞ்சத்தின் அறிகுறி
பனை விதை விதைப்போம்.
