காற்று/ஆர் வத்ஸலா


பூக்கடையைத் தாண்டி
வருவாய்
எனில்
உன்னை வரவேற்கலாம்
வாசலில் நின்று

சாக்கடையைத் தாண்டி
வருவாய் எனில் உன்னை வெறுக்கலாம்
ஜன்னலையும் சாத்தலாம்

நீ வருவதோ
அவனிருக்கும் திசையிலிருந்து
அவன் தந்த மகிழ்ச்சி நொடிகளின்
நினைவுகளை அள்ளிக் கொண்டு
அவன் பிரிவு தந்த
வேதனையை சுமந்து கொண்டு
நான் என் செய்ய

3 Comments on “காற்று/ஆர் வத்ஸலா”

  1. வேதனைகளை மறக்கத்தான் வேண்டும். ஆனாலும், சுகமான ஞாபகங்களை விட துக்ககரமான நிகழ்வுகளே நம் நினைவுகளில் மேலாதிக்கம் (ஆணாதிக்கமல்ல!) பெறுகின்றன.

    துக்கம் நிரம்பிய நிகழ்வுகளின் காரணகர்த்தாக்களை தோற்கடித்த சம்பவங்கள் முன்னுரிமை பெறும் போது, துக்கங்கள் இலம்பஞ்சு காற்றில் ஏதோவொரு கணத்தில் மறைவது போல மறைந்து விடும்.

    இம் மாதிரி வெற்றிகள் கூட நல்ல கவிதைகளைத் தரவல்லது தான்.

Comments are closed.