- பாலகாண்டம்
- நாட்டுப்படலம்
84.★
“வண்மை இல்லை ஒர் வறுமை இன்மையால்/
திண்மை இல்லை ஒர்
செறுநர் இன்மையால்
உண்மை இல்லை பொய் உரை இலாமையால்
வெண்மை இல்லை பல் கேள்வி மேவலால்”
விளக்கம்: வறுமை சிறிதும் இல்லாததால் அந்நாட்டில் கொடைக்கு இடமில்லை; நேருக்கு நேர் போர் புரிபவர் இல்லாததால் உடல் வலிமையை காட்ட வழியில்லை; பொய்ம் மொழி இல்லாமையால் மெய் தனித்தன்மை பெற்று விளங்கவில்லை; பலவித கேள்விச் செல்வம் மிகுந்து விளங்குவதால் அறியாமையும் அங்கு இல்லை.
“எள்ளும் ஏனலும் இறுங்கும் சாமையும்
கொள்ளும் கொள்ளையில் கொணரும் பண்டியும்
தள்ளும் நீர்மையின் தலைமயங்குமே”
விளக்கம்: எள்ளும், தினையும், சோளமும், சாமையும், கொள்ளும் மிகுதியாக கொண்டு வரும் வண்டிகளும், சேறு நிறைந்த உப்பளத்தில் இருந்து உப்பைக் கொண்டுவரும் வண்டிகளும் பார மிகுதியால் இயல்பாக ஓட்டிக் செல்ல இயலாது ஆட்கள் தள்ளும் தன்மையால் ஒற்றுடன் ஒன்று கலப்பதாகும்.
86.
“உயரும் சார்வு இலா உயிர்கள் செய்வினை
பெயரும் பல் கதிப் பிறக்குமாறு போல்
அயிரும் தேனும் இன் பாகும் ஆயர் ஊர்த்
தயிரும் வேரியும் தலைமயங்குமே”
விளக்கம்: உயர்கதியான வீடு பேற்றை அடைவதற்குரிய ஞானம் இல்லாத உயிர்கள் தான் செய்த வினைப் பயனை துய்க்க மாறி மாறி பல பிறவிகளிலும் பிறக்கின்ற விதம் போல சர்க்கரையும், தேனும், இனிய பாகும், இடையர் ஊர்களில் கிடைக்கும் தயிரும், கள்ளும் ஆகியவை இடம் மாறுபடும்.
