
தயவுசெய்து
இந்த மரத்தின் இலைகளை
என்னை எண்ணச் சொல்லாதீர்கள்.
உதிர்த்தும் துளிர்த்தும் சதா அது
புதுப்பித்துக் கொண்டு இருக்கிறது.
பறவைகள் புசிப்பதற்குரிய
சிறு கனிகளை மட்டுமே உடைய
இதன் கீழ் வந்து
என்னுடன் சிறிது நில்லுங்கள்.
அல்லது
சற்று முன்புதான் புற்றுக்குள் நுழைந்த
பாம்பின் தடம் கிடக்கும்
தூரத்துப் பாறையில் அமர்ந்து
அசையும் இந்த மரத்தின் கீழ்
புல்போல நிற்கும் என்னை
சற்று நேரம்
பார்த்துக்கொண்டு இருங்கள்.
அந்தச் சற்று நேரம் முக்கியமானது
என்னை விட
உங்களுக்கு.
%

சற்று நேரம் என்ன
எத்தனை நேரம் வேண்டுமானாலும்
பார்த்துக் கொண்டிருக்கலாம்
மனம் இருக்கிறது
ஆனால் மரம் இல்லையே…..
எனது நகரம் என்ற நரகத்தில்