எம்.டி.முத்துகுமாரசாமி கவிதை

கவிதை வரிகளாலானது
வாக்கியங்களால் அல்ல
முதல் வரியில் நீயொரு
மானைக் காட்டினாய் என்றால்
இரண்டாம் வரியில்
அந்த மானையொரு குதிரை பார்க்கலாம்
மூன்றாம் வரியில்
மான், குதிரை இரண்டில்
எது அழகு என்ற
கேள்வி எழலாம் நான்காம் வரியில்
அவள் உன் பார்வையின்
எல்லைக்குள் வரும் வரை