ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 41/அழகியசிங்கர்

ஆசிரியர் பக்கம்

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்

மோகினி:  புத்தகக் காட்சி எப்படிப் போகிறது?
அழகியசிங்கர் : முதல் இரண்டு நாட்கள் சரியில்லை.  இன்று கூட்டம். 
ஜெகன் :  உங்கள் புத்தகம் எப்படிப் போகிறது?
மோகினி :  தினமலர் கொடுத்த விளம்பரம் புத்தகம் விற்பதற்கு வழி காட்டுகிறது.
அழகியசிங்கர் : இரண்டு நாட்கள் புத்தகக் காட்சி டெல். இன்று சனிக்கிழமை கூட்டம் அதிகம்.
மோகினி : எத்தனைப் புத்தகங்கள் கொண்டு வந்தீர்கள்.
அழகியசிங்கர் : பத்துப் புத்தகங்கள் 
ஜெகன் :  நீங்கள் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லையே?
அழகியசிங்கர்:   குறுகிய காலத்தில் புத்தகங்களைத் தயாரித்துள்ளேன்.
ஜெகன் : நீங்கள் அதிகமாகப் புத்தகங்கள் கொண்டு வந்தாலும்,  அதை வாங்க வருவது குறைவான பேர்கள்தான் இருப்பார்கள்.
அழகியசிங்கர் : எதையும் நம்பவேண்டும். அப்படி நிகழ்ந்தால் ஒன்றும் செய்வதற்கில்லை.
மோகினி :  என்ன புத்தகம் வாங்கினீர்கள்.
ஜெகன் :    புத்தகத்தை வாங்கி சேர்த்துக்கொண்டே போகாதீர்கள்.
மோகினி :  உங்கள் வீட்டில் திட்ட மாட்டார்களா?
அழகியசிங்கர்  திட்டுவார்கள்
ஜெகன் : உங்கள் கவிதைப் புத்தகத்தை விற்க முயற்சி செய்தீர்களா?
அழகியசிங்கர்  : .இன்னும் முயற்சி செய்யவில்லை.
 மோகினி :  அரசாங்கம் நவீன விருட்சம் நூல்நிலையங்களில் வாங்க உதவி செய்துள்ளதே?
அழகியசிங்கர் : ஆமாம்.  450 பிரதிகள் வாங்க உத்தரவிட்டுள்ளது.
மோகினி : பத்திரிகையை அனுப்பி விட்டீர்களா?
ஜெகன்: புத்தகம் அனுப்பி விட்டார்.
அழகியசிங்கர்.  அனுப்பி விட்டேன்.  மனைவி உதவி செய்தாள்.  
                    எழுதியது இரவு 11.11


4 Comments on “ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 41/அழகியசிங்கர்”

  1. உங்கள் உண்மையான, சலிப்பில்லாத உழைப்பும், நம்பிக்கையும் என்றும் வீண் போகாது.

Comments are closed.