
மலையில் பிறந்து
முடியின் இழியும்
அழகில் திளைக்க
அழைப்பு விடுத்தேன்.
குழாய் வழி குதித்து
பொறி சுழற்றவரும்
விழாவினைக் காண
‘வா’ வென அழைத்தான் !
வீட்டில் விளக்கு :
மூலிகை மருந்து ?
….
சாலை இருமருங்கும்
தன்னிச்சையாய் வளர்ந்து
சூழும் தருக்கோலம்
பார்க்கிறேன் :
தேக்கு மரவரிசை
மின்சாரக் கம்பங்கள்
நிற்கும் நேர்கோட்டை
நோக்கினான்!
பறவைக்குச் சத்திரம்
குடும்பத்துக் காகுமா ?
……
தோட்ட மலர்க்
கூட்டம்
காட்டினேன் ;
தொடுத்த மலர்க்
கதம்பம்
கேட்கிறான் !
சூட்ட வென்றான் ;
சுமை என்றேன் !
முடி நாற்றம் மறைக்கப்
போர்வை மலர் ? !
