ஈரம்/அனங்கன்

இன்று உலர்ந்துபோன மனங்களில் ஈரமென்பது
வசந்தகாலபறவைபோல…

அது எல்லாமனங்களிலும்
எல்லாக்காலங்களிலும்
வந்தமர்ந்து தனது இருப்பை
கூவிவெளிப்படுத்துமெனச்
சொல்லமுடியாது.

இன்று ஈரத்தை வெளிச்சம்போட்டுக்காட்ட
இணையங்கள் இருக்கின்றன

உங்கள் ஈகையை ஈரமென்று
உணர்ந்து முகம்தெரியாத
யாருக்காகவாவது…இடதுகை
அறியாது வலதுகை நீண்டிருக்குமானால் உங்கள்
மனம் ஈரம்காயா சதுப்புநிலமென உங்களைப்
பாராட்டிக்கொள்ளுங்கள்.

ஈரத்தை தக்கவைத்துக்கொள்ள…
என்னசெய்யவேண்டுமென்று
கேட்காதீர்கள்..

நீங்கள் கடந்துசெல்லும் வழியில்…உங்கள் மனத்தை
ஈரம் சொட்ட சொட்ட நனைக்க
ஆயிரம் வழிகள் இருக்கக்கூடும்…

ஆயினும் என்ன திறன்பேசியில் முகத்தை
திணித்தபடி கடக்கும் வாழ்வில்…ஈரமென்பது
தூர்ந்தபோன கிணறாகவே
கிடக்கிறதே…என்னசெய்ய..?

One Comment on “ஈரம்/அனங்கன்”

Comments are closed.