நட்பின்அலைகள்/ஜான்னவி

பயணித்தோம்
பல பிறவிகள்
பிரிந்தும் தனித்தும்
தொடர்புண்டு
சந்திப்பு சாத்தியமான தில்லை

இப்பிறவியில்
இந்தப் புள்ளியை
வந்தடைந்தோம்
இன்னும் சந்திக்காமலே
கழிகிறது காலம்.

சந்திக்கும் எண்ணம்
உருக்கொள்ளு
முன்னதை

உதைத்துத்தள்ளிப்
பாய்ந்தோடுகிறது
காலக்குதிரை.

காலவெள்த்தில் நீந்தி வரும் நினைவலைகள்
ஒன்றையொன்று
கண்டு கொள்கையில்
உயிர்த்தெழுகிறது பழைய நட்பு.
நண்பரில்லாக்
காலம் அறியாத
மணி.

பௌதிக சந்திப்புகளால் ஆனதல்ல
நட்பின் தளம்.

அங்கு மொட்டவிழும்
வாசமலரின் இதழ்கள்
சூட்சுமமானவை.

முன்னொரு பிறவியில்
பிசிராந்தையார் நான்.
கோப்பெருஞ்
சோழன் நீ.