வையக வாழ்க்கை/ஆர்க்கே

தெருவுள் புகுந்து கடக்கையில்
நீயென்ன
ஜாதியென்றனர்..!

மாவட்டம் மாறி நகர்ந்தபோது
மதமும் ஊரும்
விசாரித்தனர்..!

மாநில இடப்பெயர்வில்
தாய்மொழி
எதுவென்றனர்…

வெளிநாடு சென்றான பின்
இந்தியன் எனக்கொண்டாடினர்.
ஜாதியும் மதமும்
ஊரும் தாய்மொழியும்
வையக வாழ்க்கை
புள்ளியில் ஒடுங்கியது.
–

One Comment on “வையக வாழ்க்கை/ஆர்க்கே”

  1. வெளிநாட்டில் நாமெல்லாரும் இந்தியரே
    என்று குறுகிய ஜாதி மத
    மொழி வேறுபாடுகளைக் கொண்டாடும் அற்ப புத்தி படைத்தவர்களுக்கு ‘சுளீர்’
    என்று அடி கொடுத்திருக்கிறார்.

    ஜான்னவி.

Comments are closed.