
நட்பிற்கு நன்றி அர்த்தமற்றது
அன்பிற்கு கைம்மாறு தேவையற்றது
பண்ட மாற்றுதல் அல்ல நேசம்
அன்பிற்கு மரணமில்லை
நேசத்திற்கு அழிவில்லை
காதலுக்கு இறுதியில்லை
நான் பறவை
பறந்து திரியவே ஆசை
கூண்டில் அடைபட்டிருக்கிறேன்
பெண்ணை பெண்ணாக நடத்த வேண்டாம்
பெண்ணை பிணமாக நினைக்க வேண்டாம்
பெண்ணை சக உயிரியாக மதித்தால் போதும்
நதியாய் வாழ்கிறேன்
புல்லாய் வளருகிறேன்
நெஞ்சில் வஞ்சம் இல்லை.
கடக்கிறேன் கடக்கிறேன்
காட்டாறுகள் குறுக்கிட்டுக் கொண்டே இருக்கின்றன
கடந்து கொண்டே இருப்பேன்.
🦀

கவிதை இயல்பூக்கம்
அருமை.
ஜான்னவி.