ஈரம் /மதுவந்தி

                           “கொடுத்த இடத்தில் 
                           கை நனைக்கலாமா?” எனச் 
                          சொல்லியே வளர்ந்த பரம்பரை 
                          அம்மாவும் அப்பாவும். 
                          தனியே ஏனிருக்க வேண்டுமென 
                          காலில் விழுந்து,கெஞ்சிக் 
                          கூட்டிவந்து அடுக்கக வாசம். 
                          முழங்காலில் வலியென ஆரம்பித்து, 
                          கைத்தடி துணையோடுதான் நடை 
                          என்றானது அம்மாவுக்கு. 
                          வயதானோர் போனாலே 
                          கவலையோடு காத்திருக்கும் இடமான 
                          குளியலறையில் ஒரு நாள் 
                          அம்மா வழுக்கி விழுந்தாள். 
                          லேசான காயத்தோடு தப்பித்தாள்.
                          இப்போது கவலையெல்லாம்
                          குளியலறையை எப்படி 
                          வைத்துக் கொள்வது துளியும் 
                           ஈரமின்றி. 

2 Comments on “ஈரம் /மதுவந்தி”

  1. ஆகா…காலத்திற்கேற்ற தேவையை கவிதையாக சொல்லிவிட்டீர்கள். குளியலறை மட்டும்தானா? வீடு நிறைத்திருக்கும் வழுக்குத் தரைகளும் கவலைக்குரியவையே ஈரம் இருந்து கொண்டிருந்தால்.

Comments are closed.