ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 11

07.10.2021


அழகியசிங்கர்

1. வணக்கம்

வணக்கம்

2. எப்போது இந்த ஐடியா தோன்றியது?

எந்த ஐடியா

3. இணையப் பத்திரிகைக் கொண்டு வரவேண்டுமென்ற ஐடியா

ரொம்ப நாளா யோசித்துக் கொண்டிருந்தேன். இப்போதுதான் சாத்தியமாகி இருக்கிறது.\

4. மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் உங்கள் பத்திரிகையை “

தெரியாது.  300 பேர்கள் பார்க்கிறார்கள்.  100 பேர்கள் அதில் எழுதுபவர்கள் பார்த்தாலும் கூட, இன்னும் 200 பேர்கள் பார்க்கிறார்கள்.

5. உங்களுக்குக் கிடைக்கும் படைப்பின் தரம் எப்படி இருக்கும்?

நான் முதலில் யோசித்துப் பார்த்தேன்.  ஒரு ஜனரஞ்சகமான பத்திரிகையை விட இது ஒரு சிறந்தத் தரத்தில் இருக்கிறது. 

6. எப்போது பதிவு செய்வீர்கள்?

மாலை 7 மணியிலிருந்து.  சில படைப்புகளைப் பார்த்தவுடன் பதிவு செய்து விடுவேன்.

7. இதனால் உங்க மற்ற பணிகள் பாதிக்கப்படுகின்றனவா?

புத்தகம் தயாரிக்கும் பணி கொஞ்சம் பாதிக்கப்படாமலில்லை. ஆனாலும் போகப்போக இது சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்.

8. இதைத் தயாரிக்க உங்கள் புதல்வர்தான் காரணமா?

ஆமாம்.  ஒவ்வொரு நாளும் இதன் திறனை அதிகரிக்க முயற்சி செய்கிறார்.

9. இன்னும் என்னவெல்லாம் செய்ய உத்தேசம்?

என்னிடம் சிறுபத்திரிகைகள் உள்ளன.  அவற்றிலிருந்து சில சிறந்த படைப்புகளை எடுத்து இதில் கொண்டு வர முயற்சி செய்வேன். எல்லோருக்கும் சரிசமமாக எழுத வாய்ப்பு கொடுப்பேன்.

10. இதழ் முடித்த பிறகு என்ன யோசனை செய்கிறீர்கள்?

இதழில் நான் தேர்ந்தெடுத்த படைப்புகள் சரியாக உள்ளனவா என்று யோசித்துப் பார்க்கிறேன்.  தூங்கும்போதுதான் இந்த யோசனை  போகும்.

11. உங்களைப் பார்த்து வேற யாராவது இந்த முயற்சி செய்வார்கள்?

வாய்ப்பிருக்கிறது. 

12. இதில் என்ன சிறப்பிருக்கிறது?

இதை எப்ப வேண்டுமானாலும் திருத்திக்கொள்ளலாம். 

13. இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? இப்போது நிம்மதியாக தூங்கப் போகிறேன்.

3 Comments on “ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 11”

  1. ( அனுப்பும் வழி தெரியவில்லை. தக்கதாய் இருப்பின் வெளியிடுக)
    சாவு
    கத்தியும் கடிகாரமும் கையில் கொண்டு
    காத்திருக்கும் அவரைக் கண்டு கொள்ளீர்!
    ஆனாலும் அதனால் என்ன!
    போனாலே வாராத பொன்னுலகு உண்டே

    சாவுத் தேவி! சலியேன் கணமும்
    தாவியும் நடந்தும் தத்தியும் உருண்டும்
    நொண்டியும் ஓடியும் நோயினில் விழுந்தும்
    வண்டியில் விரைந்தும் வானில் பறந்தும்
    வாளா விருந்தும் மயங்கிக் கிடந்தும்
    ஓயா துழைத்தும் ஒடுங்கிச் சாய்ந்தும்
    வந்து கொண்டு தானே இருக்கிறேன்
    இந்த நொடியும் எந்த நொடியும்!

    உன்னைச் சேர உயிராய் அணைக்க !
    கூடித் தழுவிக் குலவ என்னோடு
    உன்னால் என்னை உதறித் தப்ப
    ஓடித் தவிர்க்க ஒருநாள் முடியாது

    அழகியோ இளைஞனோ கிழவனோ குழந்தையோ
    பொருளனோ வறிஞனோ மருளனோஅறிஞனோ
    அரசனோ துறவியோ யாரையோ மறுப்பை?
    விலக்கா தணைக்கும் விலை(யிலா) மகளே !

    ( அனுப்பும் வழி தெரியவில்லை. தக்கதாய் இருப்பின் வெளியிடுக)

Comments are closed.