
இது மரம் அல்ல, பலகை
என்று நினைக்கிறவன் தச்சன் ஆகிவிடுகிறான்.
இது பலகை அல்ல, மரம்
என்று நினைக்கிறவன் கவிஞன்
ஆகி விடுகிறான்.
தச்சனைக் கவிஞனும்
கவிஞனைத் தச்சனும்
அழகானசிலுவைகளில்
அறைந்து கொள்கிறார்கள்.

இது மரம் அல்ல, பலகை
என்று நினைக்கிறவன் தச்சன் ஆகிவிடுகிறான்.
இது பலகை அல்ல, மரம்
என்று நினைக்கிறவன் கவிஞன்
ஆகி விடுகிறான்.
தச்சனைக் கவிஞனும்
கவிஞனைத் தச்சனும்
அழகானசிலுவைகளில்
அறைந்து கொள்கிறார்கள்.