
புகழாதீர்கள்
பராட்டாதீர்கள்
பரிசில் வழங்காதீர்கள்
நதியல்ல
சிற்றோடை
குயிலல்ல
கரிச்சான் குருவி
பெரு மரமல்ல
பெயரற்ற குறுஞ்செடி
பதினாறடி வேங்கையல்ல
புற்களைத் தேடியலையும் குழிமுயல்
சமுத்ரங்களைக் கிழித்துச் செல்லும் கப்பலல்ல
மீன்களற்று கரை திரும்பும் கட்டுமரம்
காற்றைக் குடித்து உயிர்க்கிறேன்
பூமியை பிட்டுப் பிட்டு பசி தீர்க்கிறவன்
வானம்.. சூரியன்.. நிலா.. நட்சத்திரமெனப் பார்த்து பார்த்து
மலையைப்போல
நான் நானாக இருந்து கொள்கிறேன்.
