நானும் ஆண்டுதோறும் புத்தகச் சந்தை சமயத்தில் சொல்லிக்கொண்டே இருக்கிறேன், மின் புத்தகங்களா, அச்சுப் புத்தகங்களா என்கிற பட்டிமன்றம் வைத்தால் நன்றாக இருக்கும் என்று!
BAPASI ஆசாமிகள் கண்டுகொள்வதே இல்லை.
என்னைப் பொறுத்தவரை படிக்கச் சௌகர்யம் அச்சுப் புத்தகங்களே. Kindle எல்லாம் முயன்று பார்த்துவிட்டேன். ம்ம்ஹூம். ஒரு தொந்திரவில்லாத அறையில், நாற்காலியில் ஜன்னலோரம் உட்கார்ந்து புஸ்தகம் படிப்பதே தியானம் போல! அருமையான சந்தோஷமும், அமைதியும் கிடைக்கின்றன.
முக்கியமாக, அலமாரியில் அடுக்கி வைத்த புத்தகங்களைப் பார்க்கும்போது ரூபாய் நோட்டுக் கட்டுகளைப் பார்க்கிற மாதிரி ஒரு சந்தோஷம் வருகிறதே, அது மின்புத்தகங்களில் கிடைக்குமா? புத்தகங்கள் Asset என்கிற உணர்வு அடுக்கிவைத்த புத்தகங்களைப் பார்க்கும்போதுதான் கிடைக்கும். ஹார்ட் டிரைவில் சேமித்த புத்தகங்களுக்கு அந்த உணர்வைத் தரும் சக்தி இல்லை.
அது மட்டுமில்லை, பல்வேறு சந்தர்ப்பங்களில் சேமித்து வைத்த நூற்றுக் கணக்கான மின்நூல்கள் படிக்கப்படாமல் பத்திரமாய் இருக்கின்றன! கண்ணெதிரில் அலமாரியில் இருக்கும்போதே படிக்கிறதில்லை, ஹார்ட் டிரைவில் இருப்பது எப்படி ஞாபகம் வரும்?
புத்தகச் சந்தை சமயத்தில் வாங்கின புத்தகங்கள் பல படிக்கப்படாமல் இருக்கின்றன என்கிற குற்ற உணர்வு வருகிறதே, அது சில வாரங்கள் நீடிக்கும். அப்போது படிக்கும் ஐந்தாறு புத்தகங்கள்தான் அந்த வருஷத்தின் ஸ்கோராக இருக்கும்.
இந்த வருஷம் நோட்புக் போட்டு ஒவ்வொரு புத்தகத்தையும் முடிக்க முடிக்க எண்ட்ரி போட்டுக்கொள்ள உத்தேசம்!
நண்பர்கள் தங்கள் தேர்வு மின்நூல்களா, அச்சு நூல்களா என்பதை காமெண்ட்டில் பதிவு செய்தால் மக்கள் அபிப்ராயம் எப்படி இருக்கிறது என்பதை அறிய சௌகர்யமாய் இருக்கும்.

என் choice எப்போதுமே அச்சு புத்தகங்கள்தான்.
ஒரு புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு படிக்கும் சந்தோஷமே தனி. மேலும் எனக்கு சாப்பிடும் போது படிக்கும் பழக்கம் உண்டு. மின் நூல் களில்
கிடைக்காத சௌகரியங்கள் அச்சு நூல் களில் கிடைக்கின்றன.
புத்தக அலமாரியில்
அடுக்கி வைத்திருக்கிற
புத்தகஙகளைப்பார்த்தால்
ஏற்படுகிற
பெரிய சொத்து சேர்த்து வைத்து விட்ட மகிழ்ச்சி
ரூபாய் நோட்டுக்கட்டுகளைப் பார்த்தால் கிடைக்காது.
எல்லா புத்தகப்பிரியர்களுக்கும்
இது போலத்தான் தோன்றும் என்று நினைக்கிறேன்.
ஜான்னவி