
சில கேள்விகள்(1)
ஒளிர்கிறது நீரோடை நிலவில்
என்னைப்பார்த்து
புன்னகைப்பது
நீரோடையா,
நிலவா?
🦋🦋🦋
சில கேள்விகள்(2)
யாருடைய துயரம் இது?
பெருமூச்செறிவது
காற்றா , மரங்களா?
🦋🦋🦋
சில கேள்விகள்(3)
காற்று கொண்டு
வந்திறைக்கிறது
வண்ண இலைகளை
எனக்கு, உனக்கு, அவளுக்கென
ஆனால் அது கொண்டு வந்த
சேதி யாருக்கு?
🦋🦋🦋

ஆகா…அருமையான கேள்விகள்.