
“வாக்காதி ஐந்தடியோ அகப்பேய்
வந்த வகைகேளாய்
ஒக்கம் அதானதடி அகப்பேய்
உண்மையது அல்லவடி”
விளக்கம்: அகப்பேயே! மனிதன் பேசும் மொழியின் தன்மை ஐந்தாகும். இவை தெய்வ ஒளியால் மனித உள்ளத்தில் எழுச்சி கொண்டு மொழியாகின்றது. அவை செவியோசை மொழி (வைகரி) மிடற்றோசை மொழி (மத்திமை) நினைவோசை மொழி (பைசந்தி) நுண்ணோசை மொழி (சூக்குமை) என்னும் நான்கோடு நிவிருத்தி என்னும் கலையும் கூடி ஐந்தாகிறது. எனினும் இவை மட்டும் உண்மை எனச் சொல்ல முடியாதடி அம்மா!

அருமை ஐயா,!
சிறப்பு சார்