
தணிவுறாது உருகும்
அவளின் காலத்தின்
ஒரு துளியை
புகைப்படமாக்க அதில் பங்கேற்க
அதன் இறக்கும் இயல்பு
அவளின் இமை மூடல்
அதன் பாதுகாப்பின்மை
அவளின் நாணும் கன்னம்
அதன் மாறும்தன்மை
அவளின் அலையும் கேசம்
அனைத்தையும் கணமேனும்
உறையவைக்கவேண்டும்
என்பது உனக்கு நன்றாகத் தெரியும்
நீ தொடர்ந்து உன் கேமராவை
நொடிக்கு நூறாய் இயக்குகிறாய்
துளிகளால் ஆன பிம்பங்கள்
கூடிக் கூடி கலைகையில்
ஒவ்வொரு துளியும்
ஒரு வரலாறாக
ஒரு காதலாக
ஒரு போராக
கடைசியில் ஒரு
மறதியின் புகைப்படமாக
எஞ்சுகையில்
அவள் உனைக் கடந்ததை
உணர்கிறாய்

வித்தியாசமாக சொல்லும்
விதம் சிறப்பு.ஆனால் மறதியின் புகைப்படம் என்று கவிஞர் சொல்வது மறந்து போகாமல் தடுக்கும் புகைப்படமல்லவா.
நல்ல கவிதை.
ஜான்னவி.