இப்போது நான்/வண்ணதாசன்

ஆணா பெண்ணா என்ற
அடையாளமற்ற மரப்பாச்சி.
சின்ன வயதில்
அக்கா விளையாடுகையில்
தென்னங்கீற்றில்
தலைப்பாகை கட்டிய
ஒரு ஆணாக இருந்தது.
தம்பி விளையாடும் போது
மஞ்சள் ரிப்பனைப்
புடைவையாகச் சுற்றிய
ஒரு பெண்ணாக இருந்தது.
இப்போது நான்
எடுத்துப் பார்க்கையில்
அம்மையப்பனாய்
ஆதிமூலமாய்