பசுமை /அனங்கன்

வறண்டமனங்களில் பசுமையை வாரியிறைக்கும்
கருணையை பிறருக்கு ஈயும்போது நீங்கள் பெருமை
அடைகிறீர்கள்.

காய்ந்துபோன சருகள் இடையே ஒற்றையாய்
துளிர்த்துநிற்கும்
சிறுசெடிபோல் சிலநினைவுகள் பசுமையாய்
அவ்வப்போது தலைகாட்டியபடிதான் இருக்கிறது.

சிறுவயதில் மாட்டுவண்டிப்
பயணங்களில் சாலை இருமருங்கிலும் பசுமை
தலைகாட்டிநிற்கும் வயல்கள்
இன்றும் பச்சைவயல் மனது.

போர் எக்காரணத்தில் மூண்டாலும் பசுமைவயல்
தீப்பிடித்துஎரிவதுபோல் ஒரு
பதட்டம்.

பசுமை நினைவுகள் அவரவருக்கான இருட்குகையில்
தென்றலை
வீசிவிட்டுத்தான் போகும்.

எனக்கான நினைவை பசுமைபொங்கவைத்திருக்க
கவிதை இருக்கிறது.

உங்களுக்கு…..?

One Comment on “பசுமை /அனங்கன்”

  1. இந்தக்கவிதையும் வாசிப்பவர்கள் மனம் குளிர பசுமையைத்
    தெளித்து விட்டுத்தான் போகிறது.

    ஜான்னவி.

Comments are closed.