
குப்பை கழிக்கும் நாள்
இன்று.
நிறைந்திருந்தது அருகில்
அழகான பச்சை வண்ண
ப்ளாஸ்டிக் குப்பைக் கூடை.
தொலைபேசியில் அழைத்தும்
அழைக்காமலும்
பல்வேறு விசேஷங்களுக்காக
குரியரில் அனுப்பப்பட்ட
கண்ணைப் பறிக்கும்
பணம் படைத்தவரின்
விலை உயர்ந்த அழைப்பிதழ்கள்.
மரியாதை நிமித்தம் போய்
மரியாதை பெறாமல்
திரும்பியதை நினைவுட்டிக் கொண்டு.
