பசுமை / மதுவந்தி

    


                      மாதிரிக்குக் கூட 
                      ஒன்றில்லாமல் 
                      அனைத்து இலைகளையும்
                      உதிர்த்து நிற்கிற கிளைகள். 
                      கொளுத்தும் வெயிலில் 
                       அமரக் கூட நிழலற்ற 
                       கிளைகளில் பறவைகளிருந்த
                       வாசமுமின்றி காய்ந்து நிற்கிறது மரம். 
                       ஈரத்தைத் தேடியபடி, 
                      பூமியை இறுகப் பற்றி,
                      வேர்கள் காத்திருக்கும் 
                      நம்பிக்கையோடு,
                      பசிய இலைகள் நிரம்பி வழியும் 
                      கிளைகளின் பசுமைக்கு.