
பார்க்கக் கூடிய தொலைவில் உள்ள
நெடுஞ்சாலையின் கணரக வேகத்தின் சத்தம்
எதிரெதிராக கடப்பது
சிறிது குறைவான ஒலியளவில் செவிவசப்படுகிறது
ஓட்டுனர்களின் முகம்நோக்கும் பயணதிசை
நான் காணும் திசையோடு தொடர்புடையதல்ல
இருவேறு கோணங்களின் நடுவே
ஒரு இணைவுப்புள்ளியாய்
என் சாளரம் திரைவிலக்கப்பட்டுள்ளது
இமைத்து முடிப்பதற்குள் வேகமிழக்க தொடங்கும்
நெடுஞ்சாலை
இடைப்பட்ட தூரத்தில் மானுட சாயல்கள் இல்லை
சில ஆடுகள் நாய்கள்
வாளிப்பான வெண்கோடுகளற்ற
கரிய தாய்ப் பன்றியுடன் இடைவெளியை கூட்டாமல்
உடன் ஓடிமறைகின்றன
மரங்களின் உச்சி வெம்மையில்
சிறுபறவைகளின் காட்சி சட்டகத்துள் அகப்படவில்லை
நேரமாக நேரமாக நெடுஞ்சாலையின்
அசுர இரைச்சல்லுக்கு அஞ்சி
சாளரத்தை மூடத் தோன்றாததற்கு
மேலே கண்டவைகளில் எது காரணம்.

(எண்: 001)

‘சொல் புதிது , பொருள் புதிது ‘ என்று பாரதியார் சொன்னது இதைத்தானே . நெடுஞ்சாலைக் கார்ப் பயணக் காட்சி அருமை .
(நான் எல்லாம் அரைச்ச மாவையே அரைக்கிறேன்னு தோண்றது . என்ன , ஆட்டுக்கல்லில் அரைச்சதை கிரைண்டரில் அரைக்கிற மாதிரி .)