விவேக சிந்தாமணி/வளவ. துரையன்

ஆபத்துக் குதவாப்பிள்ளை அரும்பசிக் குதவா அன்னம்;
தாபத்தைத் தீராத் தண்ணீர்; தரித் திரமறியாப் பெண்டிர்;
கோபத்தையடக்கா வேந்தன்; குருமொழி கொள்ளாச்சீடன்;
பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை யேழுந் தானே.

இவை ஏழும் இருந்தும் பயனற்றவை:


அருகில் இல்லாத பிள்ளை, பசியை தீர்க்காத உணவு, தாகத்தை தீர்க்காத தண்ணீர், கணவனின் வருமானத்தை அறிந்து செலவு செய்யத் தெரியாத மனைவி, கோபத்தை அடக்கி சிந்தித்து செயல்பட இயலாத அரசன்,


குருவின் உபதேசத்தைக் கேளாத சீடன், புனிதம் (தூய்மை) இல்லாத நீர்நிலை.

One Comment on “விவேக சிந்தாமணி/வளவ. துரையன்”

Comments are closed.