
எனது ஆன்மா கேட்கவிருக்கும்
பாடல்கள் உன்னிடம் உள்ளது
ஒரு பறவையின் தனித்த
குரல் இப்போது ஒலிக்கிறது
அப்பறவையின் குரலில்
காலம் என்னிடம் கேட்பதென்ன?
பருந்துகள் வட்டமிட்ட
பின்மதியப்பொழுதில்தான்
நீயொரு தொல்பறவை என
கண்டுகொண்டேன்
எங்கு மறைந்தாய் பூர்ணா!

எனது ஆன்மா கேட்கவிருக்கும்
பாடல்கள் உன்னிடம் உள்ளது
ஒரு பறவையின் தனித்த
குரல் இப்போது ஒலிக்கிறது
அப்பறவையின் குரலில்
காலம் என்னிடம் கேட்பதென்ன?
பருந்துகள் வட்டமிட்ட
பின்மதியப்பொழுதில்தான்
நீயொரு தொல்பறவை என
கண்டுகொண்டேன்
எங்கு மறைந்தாய் பூர்ணா!