
“நா அன்றோ நட்பு அறுக்கும்? தேற்றம் இல் பேதை
விடும் அன்றோ வீங்கப் பிணிப்பின்? அவாஅப்
படும் அன்றோ பல் நூல் வலையில்? அடும் அன்றோ
மாறு உள் நிறுக்கும் துணிபு”
விளக்கம்:
- பதறிய நாக்கால் நட்பு கெடும்.
- கட்டாயப்படுத்தினால் பேதைகளின் நற்செயல்கள் கெடும்.
- நூல்களை பயில்வதால் எவருக்கும் ஆசை கெடும்
- ஒருவர் மீது தீராத பகைமை கொண்டால் நமக்கு நாமே கெடுவோம்.
