
நேற்றின் சுவடுகளை மறந்து
இன்றைய பொழுது சுடர்கிறது
இக்கணத்தின் தீக்கங்குகள்
திசையெங்கும் பரவுகிறது
கடிகாரத்தின் முட்கள் வரைந்த
காலம் மனித குலத்தை துரத்த
வெண்ணிற இரவுக்குள்
நாஸ்தான்கா உறங்குகிறாள்
அவள் ஏற்றிவைத்த தீபம்
பனிக்குள் வெப்பமாய்
பீட்டர்ஸ்பெர்க் நகரத்தின்
சாலைகளை நிறைக்கிறது
விடிய மறுத்த அவ்விரவின்
இறுதி நொடியில் நுழைந்த
தேவன் தட்டியெழுப்பி
கொண்டிருக்கிறான்
தேவாலயக் கதவுகளை
புலம் பெயர்ந்த புத்தன்
மறிகள் கனைக்கும்
அவர்களின் மேய்ச்சல்
நிலத்தின் வேலியோரம்
வீடு கட்டினான்
சொல் அறுத்த வீரன் ஒருவன்
பறவையின் சிறகுகளை
அதனிடமே
ஒப்படைத்துக் கொண்டிருக்கிறான்
*
