
வாங்கி
என்னா
வாங்காமல்
என்ன
தேடிப் போயென்ன
தேடாமல் இருந்தென்ன
ஊர் ஊராய்
பயணித்து என்ன
பயணிக்காமல் என்ன
கடை கடையாய்
அலைந்தென்ன
அலையாமல் என்ன
நெடுந் தூரம்
சுமந்தென்ன
சுமக்காமல்
என்ன
ஷோகேசில்
அடுக்கி
அழகு
பார்த்தென்ன
பார்க்காமல் என்ன
படித்து என்ன
படிக்காமல் என்ன
உணர்ந்து என்ன
உணராமல் என்ன
ஒருநாள்
ஏதேனும்
நூலக இருட்டறை
அலமாரி அடுக்கில்
என் புத்தகம்
மனிதனுக்காகி
ஒரு சின்னஞ்சிறு
சிறு குடில்
அகல் சோதியாய்…
அறிவு சோதியாய்….
கேள்வி…
10/ 05/03/2022
இரவு மணி : 08:03
