
கந்தர் அலங்காரம் – பயந்த தனி வழி
இறப்புக்குப் பின், இந்த ஆத்மா தனியாகத்தான் போக வேண்டும். அது மட்டும் அல்ல, போகும் இடமும் தெரியாது. அந்த வழியில் வேலும் மயிலும் துணை என்கிறார். அருணகிரி நாதர்
பாடல்
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.
பொருள்
விழிக்குத் துணை = விழிக்குத் துணை
திரு மென்மலர்ப் பாதங்கள் = உயர்ந்த மென்மையான மலர் போன்ற பாதங்கள்
மெய்ம்மை குன்றா = உண்மை குறையாத
மொழிக்குத் துணை = மொழிக்குத் துணை
முரு காவெனு நாமங்கள் = முருகா, முருகா, முருகா என்ற நாமங்கள்
முன்புசெய்த = முற்பிறவியில் செய்த
பழிக்குத் துணை = பழிகளுக்கு துணை
யவன் பன்னிரு தோளும் = அவன் பன்னிரு தோள்களும்
பயந்த தனி வழிக்குத் துணை = பயந்த தனி வழிக்குத் துணை
வடி வேலுஞ் = வடிவான வேலும்
செங் கோடன் மயூரமுமே. = செங்கோடன் மயிலும்
